ஷா ஆலம், ஆகஸ்ட் 25-
பாலஸ்தீனப் பிரச்னைக்காக போராடுவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராபத்து நிறைந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறார் என்று பெர்லிஸ் மாநில முப்தி முகமது அஸ்ரீ ஜைனுல் ஆபிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பாலஸ்தீனர்களின் நலனுக்காக டத்தோஸ்ரீ அன்வார் போராடினாலும் அரசியல் ரீதியாக அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும் என்று அந்த முப்தி குறிப்பிட்டுள்ளார்.








