Dec 16, 2025
Thisaigal NewsYouTube
சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது
அரசியல்

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.16-

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலுக்கான முக்கியத் தேதிகளை முடிவு செய்வது குறித்த தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம், மெனாரா எஸ்பிஆர்-இல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடும் தேதி, வேட்புமனுத் தாக்கல் நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம், செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில், இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News