புத்ராஜெயா, நவம்பர்.07-
இன்னும் இரண்டு, மூன்று வாரத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவிருப்பதாக கூறப்படுவது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.
நிருபர்கள் அத்தகைய கேள்விகள் கேட்பதைத் தவிர்த்த டத்தோ ஶ்ரீ அன்வார், மற்ற கேள்விகளைக் கேட்கும்படி கேட்டுக் கொண்டார்.
இன்று புத்ராஜெயா மாநாட்டு மையத்தில் புதிய யோசனைகள் மீதான நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








