Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிவெட் தொழில் கல்வி பாடத்திட்டம் முதலாம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிவெட் தொழில் கல்வி பாடத்திட்டம் முதலாம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்

புத்ராஜெயா, நவ. 14-


2027 கல்வியாண்டில் பள்ளி பாடத்திட்டதின் வாயிலாக டிவெட் கல்வி பாடத்திட்டம் , முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

டிவெட் தொழில் திறன் கல்வியின் அவசியம், அவற்றின் அடிப்படை முதலியவற்றை மாணவர்கள் தங்கள் இளம் பிராயத்திலேயே அறிந்து கொள்ளும் வகையில் முதலாம் ஆண்டில் டிவெட் தொழில் திறன் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

அறிவியல், தொழில்நுட்பம், இலக்கவியல், காணொலி கலை, இசை மற்றும் சுகாதார கல்வி ஆகியற்றில் பலதரப்பட்ட அறிவார்ந்த கற்றல் அம்சங்களில் ஒரு பகுதியாக டிவெட் தொழில் திறன் கல்வி புகுத்தப்படும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →