Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானை கூட்டணிக்கு கட்டாயப்படுத்த முடியாது – அஷ்ராஃப்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானை கூட்டணிக்கு கட்டாயப்படுத்த முடியாது – அஷ்ராஃப்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து செயல்பட பக்காத்தான் ஹராப்பானை கட்டாயப்படுத்த முடியாது என்றும், அதேவேளை பேச்சுவார்த்தைக்கான கதவு தொடர்ந்து திறந்தே இருப்பதாகவும் அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒத்துழைக்க விரும்பவில்லை என்றால் அது பக்காத்தான் ஹராப்பானின் உரிமை என்றும், எந்தக் கட்சியையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்று நேற்று பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பாரிசான் நேஷனல் மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அஷ்ராஃப் கூறினார்.

கடந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்து 36 இடங்களில் 25 இடங்களை வென்ற நிலையில், மலாக்கா தேர்தலிலும் இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு தொடரும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →