டிச. 11-
பிரதமர் துறையின்கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான MITRA) மருத்துவக் கல்விக்கான உதவித்தொகைக்கு மாணவர்கள் இன்று தொடங்கி விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கடந்த 2023, 2024 ஆம் ஆண்டுகளில்மெட்ரிகுலேஷன் அல்லது து STPM தேர்வு முடித்த B40 குடும்பத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தகவல் வெளியிட்ட MITRAவின் தலைவர் பி. பிரபாகரன் கூறுகையில், விண்ணப்பங்கள் டிசம்பர் 17 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பெர்டானா பல்கலைக்கழகம் 10 மாணவர்களுக்கு முழு உதவித்தொகையும் 40 மாணவர்களுக்கு பகுதி உதவித்தொகையும் வழங்கும். இந்த முயற்சி, அரசு சாரா நிறுவனங்களின் சமூக பொறுப்பு என்ற அடிப்படையில் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுடனான கூட்டுறவின் மூலம் இந்திய சமூகத்தின் சமூக- பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை விரிவுபடுத்துவதில் MITRA-வின் ஒரு முன்னெடுப்பு ஆகும். என பிரபாகரன் மேலும் குறிப்பிட்டார்.
இந்த உதவி நிதியைப் பெற, மாணவர்கள் 2023 - 2024 க்கான மெட்ரிக்குலேஷன் கல்வியை முடித்திருக்க வேண்டும் என்பதும் அடங்கும். மேலும், STPM முடித்தவர்கள் 3.5 CGPAக்கு அதிகாமப் பெற்றிருக்க வேண்டும், குறிப்பாக, அறிவியல் பிரிவு மாணவர்களாக அவர்கள இருக்க வேண்டும்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரபாகரன் இவ்வாறு கூறினார்.








