Oct 16, 2026
Thisaigal NewsYouTube

PTPTN கல்விக் கடனுதவிக் கட்டுப்பாடுகள் விவகாரத்தில் உயர்க்கல்வி அமைச்சு தலையிடாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
PTPTN கல்விக் கடனுதவிக் கட்டுப்பாடுகள் விவகாரத்தில் உயர்க்கல்வி அமைச்சு தலையிடாது

மலேசிய உயர்கல்வி நிதி நிறுவனமான PTPTN, உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த முடிவை தானாகவே எடுக்கும் என்றும் அதில் உயர்க்கல்வி அமைச்சு தலையிடாது என்றும் அதன் அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்தார்.

PTPTN ஏற்கனவே இது குறித்து பல கூட்டங்கள் நடத்தி முடிவெடுத்துள்ளதால், அரசாங்கம் இதில் தலையிடாது என்றார். மேலும், மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, PTPTN கடனை முழுமையாக செலுத்தாத மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். வேலை இழப்பு போன்ற காரணங்களால் கடன் செலுத்த முடியாதவர்களின் சூழ்நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டு அதெற்கேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →