15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரிசெம்பிலான் சட்டமன்றம் வரும் ஜுலை முதல் தேதி சனிக்கிழமை கலைக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹாருன் அறிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மாநில சமஸ்தானாபதி துவான்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவிர் அனுமதி வழங்கியிருப்பதாக அமினுடின் ஹாருன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநில சமஸ்தானாபதியை இன்று காலையில் சந்தித்த போது மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


