May 13, 2026
Thisaigal NewsYouTube
MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு
அரசியல்

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

Share:

மடானி 2025' சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியத் தொகையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்கி, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், 70 சதவீதத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருப்பதாக மலேசிய தேசிய தொழில்நுட்ப சங்கம் புகார் தெரிவித்தது. இது சேவை வழங்குநர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக்கூட்டத்தில் கூட்டத்தில் இப்பிரச்னையை தாம் முன்வைத்ததாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள அனைத்து மானியத் தொகையையும் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சகம் விரைவுபடுத்தும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி