Oct 24, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர்-இல் Tengku Zafrul இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது உண்மையே
அரசியல்

பிகேஆர்-இல் Tengku Zafrul இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது உண்மையே

Share:

டிச. 15-

MITI எனப்படும் முதலீடு, வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz , PKR கட்சியில் இணையும் வாய்ப்பு குறித்து ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உறுதிப்படுத்தினார் பிரதமரும் PKR தலைவருமான டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம். அவர் கூறுகையில், எந்தவொரு நபரையும் தனது பங்களிப்பை வழங்க PKR கட்சி ஏற்கும் என அவர் குறிப்பிட்டார்.

Tengku Datuk Seri Zafrul விவகாரத்திலும் இது பொருந்தும் எனக் கூறிய அன்வார், பிகேஆர்-இன் வழக்கத்தில் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். UMNO உள்ளிட்ட பிற கட்சிகள் மட்டும் இன்றி, நல்ல நண்பர்களுடனான உறவைப் பேணிக்கொள்வதற்கு நல்ல முறையில் பங்களிப்பை வழங்கக்கூடியவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இதுவரை, நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கைகளின் அடிப்படையில், கட்சியில் இணைய யாரையும் நேரடியாக ஊக்குவிக்கவில்லை என்றாலும், அவர்களின் விருப்பத்தை பிகேஆர் தடை செய்யவில்லை . அவர்களின் முடிவுகளை மதித்து, பிற கட்சிகளுடன் நல்ல உறவை பிகேஆர் பேணிக் காக்கிறது என்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று PKR கட்சியின் சட்ட விதிகளைத் திருத்தும் நோக்கில் இன்று ஷா அலாமில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து ஜோகூரில் இன்று நடைபெறவிருந்த பிகேஆர் கட்சியின் 2024ஆம் ஆண்டு தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.

PKR தலைவருமான அன்வரின் வருகையை துணைத் தலைவர் Rafizi Ramli உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். PKR பொதுச் செயலாளர் டாக்டர் Fuziah Salleh, PKR தகவல் இயக்குநர் Fahmi Fadzil ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். வெள்ளப் பாதிப்புக்குள்ளான மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் இயங்கலை வாயிலாக கலந்து கொள்ளும் வகையில் இந்த மாநாடு கலப்பு முறையில் நடைபெறுகிறது.

கட்சியின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, பாலின, இனக் கோட்டா போன்ற கட்சியின் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யும் என்று Fuziah Salleh தெரிவித்திருந்தார். கட்சியின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் எதிர்கால தேர்தல்களில் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைக் கட்சி வழங்கும் ஜனநாயக பங்கேற்பின் கொள்கையைப் பின்பற்றி இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இது தலைவர் தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

கட்சிய்டின் துணைத் தலைவர்களான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அறிவியல், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங், நிக் நஸ்மி நிக் அகமது, டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருன், நூருல் இஸ்ஸா அன்வர், மகளிர் பிரிவு தலைவி FADHLINA SIDEK, AMK தலைவர் ADAM ADLY ABDUL HALIM ஆகியோரும் இந்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Related News