Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்
அரசியல்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

Share:

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பாக சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிப்பது தலையீடாகாது என்று அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அஸிஸ் பாரி தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசாங்கத்தின் முதன்மை சட்ட ஆலோசகரான சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 17ஆம் தேதி, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படும் பிரகடனத்தைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செல்லாது எனத் தெரிவித்திருந்தது.

மாநில மந்திரி பெசாரும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சியாளரைத் தன்னிச்சையாக நீக்க அதிகாரம் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

இதனிடையே, நெகிரி செம்பிலானின் நான்கு உண்டாங்-களும் துங்கு பெசார் தம்பினும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மாநில விவகாரங்களில் தலையிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

Related News