நீதிமன்றத்தின் அலுவல் நேரம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஜாமீன் பணம் செலுத்தும் முகப்பிடம் மூடப்பட்டு விட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி சட்டத்துறை அமைச்சர் Azalina Othman உத்தரவிட்டுள்ளார்.
ஜாமீன் முகப்பிடம் முன்கூட்டியே மூடப்பட்டு விட்டதால் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட 6 மலேசியர்கள், ஜாமீன் தொகையை செலுத்த முடியாமல், போலீஸ் தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அஸாலினா இதனை தெரிவித்தார்.
நீதிமன்றதினால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீனில் விடுவிப்பது என்பது அவர்களுக்கான உரிமையாகும். அந்த உரிமையை யாரும் பறித்து விடக்கூடாது. இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமலும், அதனை திருத்திக்கொள்ளவும், இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அஸாலானா வலியுறுத்தினார்.