Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்
அரசியல்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

Share:

அண்மையில் ஒரு சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பாக இந்துக்கள் மீது வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செயல்களை ஜசெக இளைஞர் பிரிவான DAPSY தீவிரமாகக் கருதுகிறது.

இன நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒடுக்க, சம்பந்தப்பட்ட தரப்பினர், குறிப்பாக தேசிய சட்டத்துறை தலைவரும் அரச மலேசிய போலீஸ் படை PDRMமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DAPSY வலியுறுத்தியது.

ஏராளமான புகார்கள் செய்யப்பட்டிருந்தாலும், உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களை சட்டத்துறை தலைவர் விளக்க வேண்டும் எனக் கோரும் DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங்கின் கோரிக்கையை DAPSY ஆதரிப்பதாகவும் அதன் தலைவர் வு கா லியோங் தெரிவித்தார்.

குர்ஆனை அவமதிக்கும் செயலாக இருந்தாலும் சரி, கோயில்களின் புனிதச் சின்னங்களை மிதிக்கும் செயலாக இருந்தாலும் சரி, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் முடிந்த வரை கடுமையாகக் கருதப்பட்டு உரிய முறையில் கையாளப்பட வேண்டும் என்பதை DAPSY வலியுறுத்த விரும்புகிறது என்றாரவர்.

கோயில்களுக்கு எதிரான தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டியது முக்கியம் என்றாலும், கார்களை எரித்தல் மற்றும் ஒரு தனிநபரின் பாதுகாப்பை அச்சுறுத்துதல் உட்பட எவரும் தன்னிச்சையான செயலில் இறங்கக்கூடா என வூ கா லியோங் கேட்டுக் கொண்டார்.

அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தாங்களாகவே நடவடிக்கை எடுக்க உரிமை இல்லை. மலேசியர்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் விரும்புகிறார்கள் என்றாரவர்.

ஆத்திரத்தைத் தூண்டும் மற்றும் சமூகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குண்டர்களை உடனடியாக கைது செய்து வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் வூ கா லியோங் வலியுறுத்தினார்.

Related News