Dec 1, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழை திரும்ப ஒப்படைத்தது தவறான தோற்றத்தை ஏற்படுத்தலாம்
அரசியல்

கடப்பிதழை திரும்ப ஒப்படைத்தது தவறான தோற்றத்தை ஏற்படுத்தலாம்

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் அனைத்துலக கடப்பிதழை ​நீதிமன்றம் நிரந்தரமாக திருப்பி ஒப்படைத்து இருப்பது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தலாம் ​என்று வழக்கறிஞர் Mohamed Hanif Khatri Abdullah அச்சம் தெரிவித்துள்ளார்.

​நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவருமான ஜாஹிட்டின் கடப்பிதழ் திருப்பி ஒப்படைக்கப்பட்டு இருப்பது, சட்டத்துறை அலுவலகம், சட்ட அமலாக்கம் தொடர்பில் இரு வகையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக Hanif Khatri குறிப்பிட்டார்.
குறிப்பாக சாமானிய மக்களுக்கு ஒரு வகையான நிலைப்பாட்டையும் , அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு வகையான நிலைபாட்டையும் சட்டத்துறை அலுவலகம் கொண்டுள்ளதா? என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது ​அந்த மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related News