Jun 26, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது GRS கூட்டணி
அரசியல்

சபாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது GRS கூட்டணி

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

இன்று நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு 9.30 மணிக்குத் கிடைக்கப் பெற்றத் தகவலின்படி, GRS கூட்டணி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சபாவின் முன்னணி எதிர்க்கட்சியான டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாரிசான் நேஷனல் 9 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் 2 இடங்களிலும், UPKO ஒரு இடத்தித்திலும், Star கட்சி ஒரு இடத்திலும் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபா மாநிலத்தில் 73 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து இடங்களிலும் இம்முறை பல்முனைப் போட்டி ஏற்பட்டது.

Related News