Oct 28, 2025
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல
அரசியல்

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto, மாநாடு நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே தாயகம் திரும்பியதற்கு மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான RTM செய்தி அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல என்று இந்தோனேசியத் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தோனேசியாவின் உள்ளூர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள், அடர்த்தியாக இருப்பதால் அதிபர் Prabowo Subianto, அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் என்று மலேசியாவிற்கான இந்தோனேசியத் தூதர் Yvonne Mewengkang தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டு குறித்து நேரடி ஒளிபரப்பு செய்த ஆர்.டி.எம்.மின் செய்தி அறிவிப்பாளர், இந்தோனேசியாவின் நடப்பு அதிபர் Prabowo Subianto –வின் பெயரை உச்சரிப்பதற்குப் பதிலாக முந்தைய அதிபர் Joko Widodo பெயரைக் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு ஆர்.டி.எம். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!