கோலாலம்பூர், அக்டோபர்.27-
மலேசியா மற்றும் அமெரிக்கா இடையே அரிய கனிமங்கள் மற்றும் அரிய நிலத் தனிமங்கள் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
“Critical Minerals” தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மலேசியா தனது உற்பத்தித் திறனை உயர்த்த விரும்பும் நிறுவனங்களுக்கு நீண்டகால செயல்பாட்டு உரிமங்கள் வழங்க உறுதியளித்துள்ளது.
அதே போல், அமெரிக்காவுக்கு அரிய நிலக் காந்தங்கள் விற்பனை செய்ய எந்த வகையிலும் தடைகள் விதிக்கப்படமாட்டாது எனும் உறுதியையும் மலேசியா அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் 47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கையெழுத்திட்டனர்.








