கோலாலம்பூர், அக்டோபர்.27-
வாஷிங்டனுக்கும், புத்ராஜெயாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யும் என்று கூறப்படுவதை மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதரர் Edgard D kagan மறுத்தார்.
அந்த வர்த்தக ஒப்பந்தங்களில் இறையாண்மையை நிலைநாட்டியே கையெழுத்திடுவதற்கு மலேசியா முடிவு எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.
மலேசியா, அமெரிக்காவுடன் வலுவான உறவை வைத்துக் கொள்ள முடிவு எடுத்துள்ள வேளையில் தனது நாட்டின் இறையாண்மையையும் அந்த ஒப்பந்தங்களின் வாயிலாக அது பாதுகாக்கிறது என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் Edgard D kagan இதனைத் தெரிவித்தார்.








