கோலாலம்பூர், அக்டோபர்.26-
சபா, திரெங்கானு மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள மசீச கட்சித் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார். இரண்டு மாநிலங்களுக்குமான சாத்தியமான வேட்பாளர் பட்டியலைத் தாங்கள் பாரிசான் நேஷனல் தலைமைக்கு அனுப்பி விட்டதாகவும், இருப்பினும் இறுதி முடிவை பிஎன் தலைவரே வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது பிஎன்னின் வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். சபா மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக மசீச வலுவாகக் காலூன்றி இருப்பதாகவும், உள்ளூர் சபாவின் மக்களே தற்போது மாநிலத் தலைமையைப் பெரும்பாலும் வழிநடத்துவதாகவும் வீ கா சியோங் மேலும் தெரிவித்தார்.








