Jan 21, 2026
Thisaigal NewsYouTube
அனுப்பிய கடிதம் பிரதமரால் ஓரங்கட்டப்பட்டதே தமது முடிவுக்குக் காரணம்
அரசியல்

அனுப்பிய கடிதம் பிரதமரால் ஓரங்கட்டப்பட்டதே தமது முடிவுக்குக் காரணம்

Share:
  • ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஷெட் செடிக்

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி தன்னிச்சையாக போட்டியிடவிருக்கிறது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இது அவசர முடிவு என்றும் , பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமியிலான ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியதை, மூடா கட்சியின் தலைவர் ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.

ஒரு சிறிய கூட்டத்திற்காக கட்சியின் கோரிக்கைத் தொடர்பான மூன்று கடிதங்களை தாம் அனுப்பிய போது பக்காத்தான் ஹராப்பானின் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் புறக்கணித்ததாகவும், அக்கடிதத்தைப் படிக்க நேரமில்லை என்றும் பதிலளித்ததாகவும், இதனால் தாமும் தமது கட்சியும் சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் ஷெட் செடிக் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மலேசியாவைக் கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்லும் வழியை முன்மொழிய ஒரு கூட்டத்தை மட்டுமே தாங்கள் விரும்பியதாக ஷெட் செடிக் குறிப்பிட்டார். ஆனால் , பிரதமர் அன்வாரின் அரசாங்கம் சீர்திருத்தங்களைக் காட்டவில்லை என்பதால், முடா கட்சி சமநிலையில் பெரிய பங்கை வகிக்க வேண்டும் என்பதற்காக தாம் தன்னிச்சையாக போட்டியிடப் போவதாக ஷெட் செடிக் தெரிவித்தார்.

Related News