Oct 15, 2026
Thisaigal NewsYouTube

63, 652 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
63, 652 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

கோலாலம்பூர், ஜன.4-


கடந்த ஆண்டில் சமூக வலைத்தளங்களில் மோசடித் தன்மையிலான 63 ஆயிரத்து 652 உள்ளடக்கங்களை கொண்ட காணொளிகளை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் அகற்றியுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிகையில் கடந்த ஆண்டு மோசடித்தன்மையிலான உள்ளடக்கங்களின் எண்ணிக்கை கூடுதலாக ஆறு ஆயிரத்து 297 உள்ளடக்கங்கள் அதிகரித்து இருப்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக தியோ குறிப்பிட்டார்.

நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலமானவர்களைப் போல் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுதல், போலியான விவரக்குறிப்புகள், போலியான படங்கள், வீடியோ , வார்த்தைகள் முதலிய மோசடித் தன்மையிலான உள்ளடக்கங்கள் அடையாளம் காணப்பட்டதாக தியோ விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →