ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இதுவரையில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் சீனர்கள் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பக்காத்தானையும் பாரிசானையும் ஆதரிப்பார்கள் என்று உத்தரவாதம் கிடைத்து விட்டது. தற்போது மலாய்க்காரர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவுதான் தங்களுக்கு தேவைப்படுவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இன்று பினாங்கு,பாலிக் புலாவ், ஜாலான் சுங்கை பினாங் கில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டத்தோஸ்ரீ அன்வார், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


