கோலாலம்பூர், அக்டோபர்.23-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி முகமட் நூர் வெளியிட்ட அவதூறு தன்மையிலான அறிக்கையை மீட்டுக் கொண்டார்.
சனூசியும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரும் செய்து கொண்ட ஓர் இணக்கத்தின் அடிப்படையில் அவதூறு தன்மையிலான அந்த அறிக்கையை மீட்டுக் கொள்வதற்கு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
சட்ட வழக்கின் தன்மையை உணர்ந்து தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சனூசி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.