Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நலத்திட்டங்கள் பி40 பிரிவினருக்கு மட்டுமல்ல, எம்40 மக்களுக்கும் நீட்டிக்கப்படும்: டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்
அரசியல்

நலத்திட்டங்கள் பி40 பிரிவினருக்கு மட்டுமல்ல, எம்40 மக்களுக்கும் நீட்டிக்கப்படும்: டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை பி40 பிரிவினருக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், எம்40 பிரிவினரின் தேவைகளையும் நலன்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று லிங்கி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

மாநில அரசால் திட்டமிடப்பட்ட நலன்களையும் வளர்ச்சியையும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அதிகமான மக்கள் அனுபவிப்பதை உறுதி செய்ய இந்த விரிவாக்கம் மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுக் கூறினார்.

Related News