Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

‘ham & cheese sandwich’ விற்பனை தொடர்பான விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம்

Share:

ஜன. 19-

மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள KK Mart கடையில் ஹலால் தகுதி சர்ச்சைக்குரிய ‘ham & cheese sandwich’ விற்பனை தொடர்பான விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று துணைப் பிரதமர் Zahid Hamidi கேட்டுக்கொண்டுள்ளார். விற்பனையாளர் தரப்பு ஏற்கனவே பொருட்களை திரும்பப் மீட்டுக் கொண்டுள்ளதால், இந்த பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்றும், இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் Jakim, உள்நாட்டு வர்த்தகம் , வாழ்க்கைச் செலவின அமைச்சு, காவல்துறை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அம்னோ இளைஞர் தலைவர் Dr Akmal Saleh, கடையில் 'அல்லாஹ்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலுறை விற்பனை தொடர்பான பழைய பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். ஆனால், அசீச, ஜசெக தலைவர்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று அக்மலுக்கு அறிவுறுத்தினர். ham என்பது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மட்டுமே குறிக்கும் என்றும், நாட்டில் ‘turkey ham’ , ‘chicken ham’ போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன என்றும் ஜசெக துணைத் தலைவர் Nga Kor Ming கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!