வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அமானா கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொண்டதன் அடிப்டையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சி போட்டியிடவிருக்கிறது.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி வேட்பாளராக ஜோகூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சுஹைஸான் கையாத் போட்டியிடுகிறார். சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பாக நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த சலாவுதீன் அயூப், அமானா கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


