Oct 28, 2025
Thisaigal NewsYouTube
மேல்முறையீடு செய்வேன் என்கிறார் முகைதீன் யாசின்
அரசியல்

மேல்முறையீடு செய்வேன் என்கிறார் முகைதீன் யாசின்

Share:

கோலாலம்பூர், நவ.8-


டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கு அவதூறு விளைவித்ததற்காக அவருக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தினால் தமக்கு உத்தரவிடப்பட்டத்தொகை, அதிகபட்சமானது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு தமது வழக்கறிஞருக்கு தாம் உத்தரவிட்டு இருப்பதாக முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதீன் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தமக்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பினால் தாம் மிகுந்த ஏமாற்றம் கொள்வதாக முகைதீன் தெரிவித்துள்ளார். எனினும் உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை தாம் மதிப்பதாக 77 வயதான முகைதீன் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தொண்டு அமைப்பான யாயாசான் அல்புகாரி அறவாரியம் தொடர்புடைய வரி விவகாரத்தில் தம்மை காயப்படுத்தும் வகையில் அவதூறான அறிக்கையை வெளியிட்டதாக கூறி, டான்ஸ்ரீ முகைதீனுக்கு எதிராக முன்னாள் நிதி அமைச்சரான லிம் குவான் எங் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் இன்று வெற்றி பெற்றார்.

பினாங்கு முன்னாள் முதலமைச்சரான லிம் குவான் எங்கிற்கு 13 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையும், 50 ஆயிரம் ரிங்கிட் வழக்கு செலவுத்தொகையையும் செலுத்தும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முகைதீனுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப, லிம் குவான் எங்கிற்கு அவதூறு ஏற்படுவதற்கு வழிவகுத்த அவருக்கு எதிரான வாசகங்களை உள்ளடக்கிய அறிக்கைகளின் பதிவேற்றத்தை தமது வலைத்தளத்திலிருந்து முகைதீன் உடனடியாக அகற்றியுள்ளார்.

Related News