Sep 23, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி
அரசியல்

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கவிதைக்கு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் சாஹித் ஹமிதி தமது சொந்த வரிகளைக் கொண்ட கவிதையுடன் பதிலளித்துள்ளார்.

பகாங் பே ஹோட்டல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாரிசான் நேசனல் தலைவரான அவர், அன்வாரின் கவிதையைப் படித்த பிறகு நேற்று இரவே இதனை எழுதியதாகக் கூறினார்; மேலும் பாக்காத்தான் அரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், இது "பேங்காக் நகர்ச்சியும் அல்ல துபாய் நகர்ச்சியும் அல்ல என அவர் குறிப்பிட்டார். பேரரசரின் உத்தரவுக்கேற்ப 15-வது நாடாளுமன்றக் காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் நிலைத்திருக்கிறோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News