கோலாலம்பூர், நவம்பர் 04-
பெர்சத்து கட்சித் தேர்தலில் அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று உதவித் தலைவர்களுக்கான பதவிகளுக்கு ரொனால்டு கியாண்டி, ரட்ஜி ஜிடின் மற்றும் அஹ்மத் பைசல் அசுமு வெற்றி பெற்றுள்ளனர்.
பெர்சத்து கட்சித் தேர்தலில் இரண்டு அணிகள் உருவாகியிருந்தாக கூறப்பட்டது.
தற்போது கட்சியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹம்சா சைனுதீன் தலைமையில் ஓர் அணியினரும், அஸ்மின் அலி தலைமையில் மற்றொரு அணியினரும் இருந்ததாக சொல்லப்பட்டது.








