கூச்சிங், நவம்பர்.03-
சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி ஓப்பெங்கிற்கு ஜப்பான் அரசாங்கம் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஜப்பான்-மலேசியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அபாங் ஜொஹாரி ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக The Order of the Rising Sun, Gold மற்றும் Silver Star விருது வழங்கியுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான இலையுதிர் கால அரச மரியாதை விருதுகள் பட்டியலில் அபாங் ஜொஹாரியும் ஒருவர் என்று ஜப்பானிய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் மலேசியா இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதில் அபாங் ஜொஹாரி மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








