Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானைக் கைப்பற்றப் போவது யார்? பக்காத்தான் – பாரிசான் நேஷனல்  இடையே இறுதிக்கட்ட மல்யுத்தம்: ‘வோடஸ்’ கணிப்பால் பரபரப்பு
அரசியல்

நெகிரி செம்பிலானைக் கைப்பற்றப் போவது யார்? பக்காத்தான் – பாரிசான் நேஷனல் இடையே இறுதிக்கட்ட மல்யுத்தம்: ‘வோடஸ்’ கணிப்பால் பரபரப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிகளுக்கு இடையே ஆட்சியைப் பிடிக்க அதிரடியான, மிகக் கடுமையான போட்டி நிலவி வருவதாக ‘வோடஸ் ரிசர்ச்’ நடத்திய புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புதிய அரசை அமைக்க 19 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பக்காத்தான் ஹரப்பான் 17 இடங்களிலும், பாரிசான் நேஷனல் 15 இடங்களிலும், பெரிகாத்தான் நேஷனல் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மீதமுள்ள இடங்கள் இழுபறியில் உள்ளதால், எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்றம்’ அமைவதற்கோ அல்லது இறுதி நேரப் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு விழுக்காட்டின் அடிப்படையில் முடிவுகள் மாறுவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளதாக வோடஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கெல்வின் கோ தெரிவித்துள்ளார்.

பெரும் செல்வாக்கு வாக்குகளில் பக்காத்தான் 42 விழுக்காட்டுடன் முன்னிலையில் இருந்தாலும், மலாய் வாக்காளர்கள் மத்தியில் பாரிசான் நேஷனல் 41 விழுக்காடு ஆதரவுடன் பலமாக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் இறுதி நேர வாக்குப்பதிவு விழுக்காட்டைப் பொறுத்தே அமையும் அந்த ஆய்வு மையம் கூறுகிறது.

Related News