Aug 26, 2026
Thisaigal NewsYouTube
இரு நபர்களிடம் போலீசார் விசாரணை
அரசியல்

இரு நபர்களிடம் போலீசார் விசாரணை

Share:

முன்னாள் அமைச்சரும், செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான தெரேசா கோக் கடந்த சனிக்கிழமை தமது வீட்டில் இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களுடன் கொலைமிரட்டல் கடிதத்தை பெற்றது தொடர்பில் போலீசார் முழு வீச்சில் விசாரணை செய்து வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இரு நபர்களிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இன்னும் யாரும் பிடிபடவில்லை என்று அவர் விளக்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தெரேசா கோக் போலீசில் புகார் செய்து இருப்பதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

Related News