Jul 23, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் -  பெரிக்காத்தான் கூட்டணிகளின் முழக்கம் அதிகாரத்திற்கான போலி நாடகம்: காலிட் சமாட் சாடல்!
அரசியல்

பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் கூட்டணிகளின் முழக்கம் அதிகாரத்திற்கான போலி நாடகம்: காலிட் சமாட் சாடல்!

Share:

பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளின் ‘மலாய்-முஸ்லிம் ஒற்றுமை’ முழக்கம், இஸ்லாமிய சமூகத்திற்கானதல்ல; அது வெறும் அதிகாரக் கைப்பற்றலுக்கான போலி நாடகம் என்று அமானா கட்சியின் தொடர்புத்துறை இயக்குநர் ஹாஜி காலிட் அப்துல் சமாட் கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று சிரம்பானில் பி.கே.ஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ பாஹ்மி பாட்ஸில் மற்றும் ஜசெக நெகிரி செம்பிலான் மாநில செயலாளர் சா கீ சின் ஆகியோருடன் இணைந்து, அமானா கட்சியின் தொடர்புத்துறை இயக்குநர் ஹாஜி காலிட் அப்துல் சமாட் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசை வீழ்த்தி, சுயநலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமரவே இவ்விரு கூட்டணிகளும் இந்த முழக்கத்தைப் பயன்படுத்துகின்றன காலிட் அப்துல் சமாட் சாடினார்.

தேர்தல் ஆதாயத்திற்காக மலாய் வாக்காளர்களிடையே இனவாத மற்றும் மதவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மக்களிடையே வெறுப்புணர்வையும் பிரிவினையையும் விதைக்க இவர்கள் முயல்கின்றனர். நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் இத்தகைய போலிச் சென்டிமென்ட்டுகளைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது என்று காலிட் அப்துல் சமாட் வலியுறுத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாக்காத்தான் அரப்பான் அரசு செய்துள்ள உண்மையான சாதனைகளையும் பொருளாதார வளர்ச்சியையும் மட்டுமே பார்த்து வாக்களிக்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் எப்போதும் ஒட்டுமொத்த மலேசியர்களின் ஒற்றுமையையே முன்னிறுத்துகிறது" என்று கூறி காலிட் சமாட் தனது உரையை நிறைவு செய்தார்.

Related News