Apr 19, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் உள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - ஜம்ரி தகவல்
அரசியல்

மத்திய கிழக்கில் உள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - ஜம்ரி தகவல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.03-

மத்திய கிழக்கு பிரதேசங்களில் கல்வி கற்று வரும் 1,936 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சின் ஒத்துழைப்புடன், தனது அமைச்சு அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், எந்த ஒரு மாணவருக்கும் ஆபத்தோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருப்பதாகவும் ஜம்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாய் மற்றும் ஜோர்டானை தளமாகக் கொண்ட கல்வி மலேசியா என்ற அமைப்பு, அரபு நாடுகள் அனைத்தையும் கண்காணித்து, மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 1,762 மாணவர்கள் ஜோர்டான்-னிலும் மற்ற மாணவர்கள், சவுதி அரேபியா, குவைத், ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளிட்ட நாடுகளில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News