நவம்பர்- 11
சரவா மாநிலத்த்தில் உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கைசெலவுகளுக்காக அடுத்த ஆண்டு முதல் தலா 1,200 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று சரவா முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டடார். 1,500 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கைசெலவுகளுக்கு ஒரு முறை வழங்கக்கூடிய 1,200 வெள்ளி வழங்கப்படுவதற்கு மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சரவா மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த உதவித் திட்டத்தின் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள சராசரி 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.
தவிர மாணவர்களுக்கு தலா 500 வெள்ளி மதிப்புள்ள புத்தக வவுச்சர்களும் வழங்கப்படும். இதற்காக 20 லட்ச வெள்ளி ஒதுக்கப்ப்டடுள்ளது. மேலும் உயர்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க மற்றும் தனியார் பல்லைக்கழகங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 166 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணிகள் வழங்கப்படும் என்பதையும் மாநில முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார்.








