பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சில சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான நடவடிக்கை அறைக்கு பல புகார்கள் வந்து சேர்ந்துள்ளன.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் ஊடக செயலக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாலோங் மற்றும் செம்போங் சட்டமன்றத் தொகுதிகளில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாலோங் தொகுதியில் கொடிகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், செம்போங் தொகுதியில் கொடிக்கம்பங்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரப் பொருட்களுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவிப்போருக்கு எதிராக தேர்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் எச்சரித்துள்ளது. நிலைமையை மேலும் மோசமாக்கத் துடிக்கும் நபர்களின் செயல்களுக்குப் பிரதிபலிப்பாக, பக்காத்தான் ஹராப்பான் இன் தொண்டர்கள் எவரும் எந்தவித எதிர்வினையாற்ற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








