Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு: மேலும் 14 பேரிடம் போலீஸ் விசாரணை
அரசியல்

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு: மேலும் 14 பேரிடம் போலீஸ் விசாரணை

Share:

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி மற்றும் நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டில், மேலும் 14 பேரை விரைவில் விசாரணைக்கு அழைக்க போலீஸ் தீர்மானித்துள்ளது.

இது குறித்து மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும், விசாரணையை விரைவுபடுத்த இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணை இன்னும் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுமார் 14 பேர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

மேலும், விசாரணை செயல்முறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையானது சட்ட நடவடிக்கைக்காக அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் இஸ்மாயில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, அதே வழக்கு விசாரணைக்காக, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுதீனின் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலித் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த காலிட் இஸ்மாயில், அந்த விவரத்தை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Related News