நவ.22-
பிகேஆர் வட்டாரத்தில் சர்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினராக பார்க்கப்படும் பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் கரீம், கட்சின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் இரண்டு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு நேற்று இலக்கான ஹசான் காரீம், நாட்டின் இரண்டாவது 5G அலைக்கற்றை வழிநடத்தும் யு மோபைல் சென். பெர்ஹாட் நிறுவனத்தில் மாமன்னர் கொண்டுள்ள பங்கு குறித்து எழுதிய கட்டுரை தொடர்பில் அவர் பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனக்கு ஆதரவானவர்கள் என்ற முறையில் நாட்டின் இரண்டாவது 5G அலைக்கற்றை வழிநடத்தும் யு மோபைல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு பங்குரிமையை வழங்கியுள்ளதாக ஹசான் கரீம், மற்றொரு பகிரங்க குற்றஞ்சாட்டை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








