Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.26-

பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி மாற்றமின்றித் தொடரும் என்று அதன் துணைத் தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். ஷா ஆலமில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநில மாநாட்டிற்குப் பிறகு பேசிய அவர், ஏதேனும் ஒரு கட்சி மாற்றத்தைக் கோரினால் மட்டுமே தொகுதிப் பங்கீட்டில் திருத்தங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இக்கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கும் வரவிருக்கும் தேர்தல்களில் தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related News