நெகிரி செம்பிலான் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர், தங்களது நியமனங்களை ரத்து செய்த மாநில அரசின் முடிவை எதிர்த்து சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை ரத்து செய்து வெளியிடப்பட்ட அரசிதழின் சட்டப்பூர்வத்தன்மையையே அவர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
அரசிதழை மாநிலச் செயலாளர் வெளியிட்டது செல்லுபடியாகுமா, அது சட்டப்படி அமல்படுத்தக்கூடியதா என்பது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் அறிவிப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு அக்டோபர் 5-ஆம் தேதி மாநிலச் செயலாளர் மற்றும் மாநில அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது.








