பினாங்கு, நவ. 25-
பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டிற்கு ஆளும் கட்சி சட்மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போல சமமான மானிய ஒதுக்கீட்டை வழங்கும் திட்டத்தை பினாங்க அரசு கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் சோவ் கோன் இயோ தெரிவித்தார்.
எனினும் தொகுதி மேம்பாட்டிற்கு மானியம் கேட்டு, எதிர்க்கட்சியினர் விண்ணப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சியினர் அவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று பினாங்கு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது சோவ் கோன் இயோ இதனை தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 5 லட்சம் ரிங்கிட் மானியத்தையும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 60 ஆயிரம் ரிங்கிட் மானித்தையும், ஒவ்வொரு தொகுதி ஒருங்கிணைப்பாளருக்கும் தலா ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தையும் பினாங்கு அரசு வழங்கியிருப்பதை முதலமைச்சர் சுட்டிக்கட்டினார்.








