வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் அக்குடியரசின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகம், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை தர்மன் சண்முகம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கிடம் இன்று ஜுன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஏதுவாக தர்மன் சண்முகம் தாம் அங்கம் வகிக்கின்ற பிஎபி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகும் அதேவேளையில் அரசாங்கத்தில் தாம் வகித்து வரும் பொறுப்புகளையும் வரும் ஜுலை 7 ஆம் தேதி ராஜினாமா செய்யவிருக்கிறார்.
66 வயதான தர்மன் சண்முகம், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். துணைப்பிரதமர் என்ற முறையில் நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் தர்மன் சண்முகம் வகித்துள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


