Oct 24, 2025
Thisaigal NewsYouTube
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சினால் மத்தியஸ்தம் மட்டுமே செய்ய இயலும்
அரசியல்

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சினால் மத்தியஸ்தம் மட்டுமே செய்ய இயலும்

Share:

கோலாலம்பூர், டிச.10-


இன மற்றும் சமய விவகாரங்களை எழுப்பும் சர்சைக்குரிய சமயப் போதகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, மத்தியஸ்தம் மட்டுமே செய்து வைக்க இயலும் என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மேலவையில் தெரிவித்தார்.

அதேவேளையில் சர்ச்சைக்குரிய விவகாரங்களை எழுப்பும் இத்தகைய சமயப் போதகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்பதை துணை சரஸ்வதி கந்தசாமி ஒப்புக்கொண்டார்.

சர்ச்சைக்கு இடமான கருத்துகளை சமயப் போதகர்கள் எழுப்பும் போது அமைச்சு அளவில் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர்களை அழைக்கிறோம்..

இத்தகைய கலந்துரையாடல் நடத்துவதற்காக சமய விவகாரம் தொடர்பில் நிர்வாக மற்றும் மத்தியஸ்தம் பிரிவு ஒன்றை அமைச்சு தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அரச பரிபாலனம், சமயம் மற்றும் இனம் சார்ந்த 3R விவகாரங்களில் சமயப் போதகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவார்களயானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாறுப்பட்ட அமைச்சின் கீழ் உள்ள அமலாக்க ஏஜென்சிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்று மேலவையில், செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனின் வாய்மொழி கேள்விக்கு பதில் அளிக்கையில் சரஸ்வதி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் ஃபிர்டாவுஸ் வோங் போன்ற சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒற்றுமைத்துறை அமைச்சு முன்மொழியுமா? என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தமது பூர்வாங்க கேள்வியை துணை அமைச்சர் சரஸ்வதிடம் முன்வைத்தார்.

Related News