கோலாலம்பூர், டிசம்பர்.08-
பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியான ம.சீ.ச தொடர்ந்து வீற்றிருக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் ஜொஹாரி கானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல், வரும் பொதுத் தேர்தலில் டிஏபி - யுடன் தொடர்ந்து அரசியல் ஒத்துழைப்பைக் கொண்டு இருந்த போதிலும், சீன சமுகத்தின் பிரதான அரசியல் கட்சியான மசீச பாரிசான் நேஷனலை விட்டு விலகாது என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பாரிசான் நேஷனலை விட்டு விலகுவது தொடர்பில் மசீச தொடர்ந்து சொந்த காரணங்களைக் கொண்டு இருக்கலாம். ஆனால், அவ்வாறு முடிவு எடுக்காது என்று தாம் திடமாக நம்புவதாக தோட்டம் மற்றும் மூலத் தொழில் துறை அமைச்சரான ஜொஹாரி கானி தெரிவித்தார்.








