வரும் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் மஇ.கா ஈடுபடாது என்று அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்காக மட்டுமே மஇகா தேர்தல் களத்தில் இறங்கும் என்று அதன் முன்னணி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர மத்திய செயலவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தலைவர் கூறுகிறார்.
தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மஇகாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஇகா மதிக்கப்படவில்லை. கட்சிக்கு நியாயமான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்காக மஇகா உறுப்பினர்கள் களம் இறக்க மாட்டார்கள் என்று அந்த முக்கியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் மஇகாவினால் இனியும் பொறுமை காக்க முடியாது. மஇகா தேர்தலில் போட்டியிடுவதைவிட அதற்கு தன்மானமும், அதன் எதிர்காலமும்தான் முக்கியம் என்று அந்த தலைவர் கூறுகிறார்.

அரசியல்
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் மஇகா திட்டவட்டம்
Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


