பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படவே மூடா கட்சி விரும்பியது. ஆனால், பல்வேறு நிலைகளில் பக்காத்தான் ஹராப்பானினால் மூடா கட்சி புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மனம் திறந்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வாருக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கும் மூடா கட்சி, ஓர் ஆதரவு கட்சி என்ற முறையில் பிரதமர் அன்வாருடன் ஓர் எளிய சந்திப்பை நடத்துவதற்கு தேதி கேட்டு மூன்று முறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில் தாங்கள் கைவிடப்பட்டதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
தாங்கள் அனுப்பிய கடிதங்களை படிப்பதற்குகூட நேரமில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறிய போது, தாங்கள் மற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டதாக சையிட் சாடிக் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
