மலேசியர்களில் பெரும்பான்மையினர் தற்போது பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டை ஆட்சி செய்து வரும் ஒற்றுமை அரசாங்கத்தை விட மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை உணர்ந்து, அவற்றுக்கு தீர்வு காணக்கூடிய திறன், தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு மட்டுமே உண்டு என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார்.
மக்களின் பிரச்னைகளை கண்டறிவற்காக அடிதட்டு மக்களை சந்தித்த போது, அவர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனலுக்கு இருப்பதை தங்களால் அறிய முடிந்ததாக முகைதீன் இன்று விவரித்தார்.








