Oct 24, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் பிரச்சாரத்தின் போது 3ஆர் இன் ஊடுருவலைக் கட்டுப்படுத்த சமூகத்தின் பங்கு முக்கியம் - தியோ
அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தின் போது 3ஆர் இன் ஊடுருவலைக் கட்டுப்படுத்த சமூகத்தின் பங்கு முக்கியம் - தியோ

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், சமூக ஊடகத் தளங்களில் குறிப்பாக 3ஆர் எனப்படும் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான விவகாரங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுவதில் சமூகம் முக்கிய பங்கைக் கொண்டிருக்க வேண்டும்.

அது தொடர்பான கூறுகளைக் கொண்ட பதிவுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள வழங்குநரிடம் பொதுமக்கள் புகாரளிக்க வேண்டும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீய் சி ஹிங் தெரிவித்துள்ளார்.

"இதில் மக்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். எல்லா சமூக ஊடகத் தளங்களிலும் புகார் அளிப்பதற்கான பகுதி உள்ளது. எனவே 3ஆர் சம்பந்தப்பட்ட பேச்சு அல்லது உள்ளடக்கம் இருப்பதாக அவர்கள் நினைத்தால், அந்தச் செய்தியை சம்பந்தப்பட சமூக வலைத்தள வழங்குநரிடம் தெரிவிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதன் வழி அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

புக்கிட் கெபாயாங் மாநில சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தியோ, செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

3ஆர் விவகாரத்தில் காவல்துறை சமரசம் செய்து கொள்ளாது என்றும், சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினர் மீதும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் கீழ் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசியக் போலிஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News