Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய ஊழல் நிகழவில்லை : பிரதமர் கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய ஊழல் நிகழவில்லை : பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜன.3-

நாட்டிற்கு தாம் தலைமையேற்ற இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ஊழல் எதுவும் நிகழவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அரசாங்க குத்தகைகள் வழங்கப்பட்ட டெண்டர்முறையில் முறைகேடுகள் நிகழவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க கேந்திரத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்நெறி நடைமுறைகளை பலப்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் வாயிலாக இந்த வட்டாரத்தில் ஓர் துடிப்புமிக்க அபாராமான நாடாக மலேசியாவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →