நவ. 7-
மலேசியாவிற்கு வருகை தந்த சீன நாட்டுப்பிரஜைகளில் சுமார் 12 லட்சம் பேர், தங்களின் தாயகத்திற்கு திரும்பாமல், மலேசியாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இந்த 12 லட்சம் பேர் எண்ணிக்கையில், தற்போது நாட்டில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 817 பேராகும். கடந்த 2018 ஆம்ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து தற்போது வரையில் 84 லட்சத்து 91 ஆயிரத்து 653 பேர் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 80 லட்சத்து 12 ஆயிரத்து 294 பேர் தங்கள் தாயகத்திற்கு திரும்பிவிட்டனர் என்று. 4 லட்சத்து 79 ஆயிரத்து 359 பேர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. காரணம், நீண்ட கால விசாவில் சட்டப்பூர்வ அளவில் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளவர்கள் ஆவர் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.








